Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளியில் நிகழ்ந்த மரணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னையில் சைதாப்பேட்டையில் ஆஸ்ரமம் பள்ளியை நடத்தி வருகிறார். இதில் மதுராந்தகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தோட்ட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

அவர் பள்ளிக்கூட வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் கிளைகளை நீக்குவதற்காக மரத்தில் ஏறியுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.