Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஆர்யாவுக்கு அம்பை நீதிமன்றம் பிடி வாரண்ட்- பிரச்சனை இதுதான்

தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் ஜாலியான நடிகர் ஆர்யா. இவர் பாலா இயக்கத்தில் அவன் இவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் சிங்கம்பட்டி சமஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகியவை குறித்து அவதூறாக காட்சிகள் உள்ளதாக கூறி, 2013ல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு நேற்று நடைபெற்றபோது சம்பந்தப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி முரளிதரன், ஜூலை 13ம் தேதி மூவரும் ஆஜராக வேண்டுமென்று பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.