Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தள்ளி போகிறார் சந்தானம்- ஆத்திரத்தில் ரசிகர்கள்

ஒரு காலத்தில் நகைச்சுவை நாயகன் என இருந்தவர், சந்தானம். வருடத்திற்கு 5, 6 படங்கள் என பிஸியாக நடித்து கொண்டிருந்தவர். ஒவ்வொருவருக்கும் பிரச்சனையாக ஒருவர் வருவது வழக்கம் தான். ஆனால் இவருக்கு பிரச்சனை வேறு யாரும் இல்லை இவரே தான். ஏனெனில் மற்றவர்களின் பேச்சை கேட்டு தனது நகைச்சுவை கிரீடத்தை வெறுத்தவிட்டு நாயகன் கிரீடத்தை பெற நினைத்த அவருக்கு கிடைத்தது என்னவோ தொடர் தோல்விகள் தான்.

அந்த அளவிற்கு அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. இருந்தாலும் அவரது பிடிவாதம் சற்றும் குறையவில்லை. அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர பல மாதங்களாக காத்திருக்கும் படம் சர்வர் சுந்தரம். ஏனெனில் ஃபர்ஸ்ட்காபி தயாராகி பல மாதங்கள் கடந்த நிலையில் பலமுறை ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டும் படம் வெளியாகவில்லை.

ஒருவழியாக ஜூலை 6ல் படம் வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவித்தனர். ஆனால் இந்த முறையும் படம் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், தயாரிப்பாளாருக்கு உள்ள அதிகளவிலான கடன்களே ஆகும். இதனாலயே ரீலிஸ் தேதி தள்ளி போகிறது.

இம்முறையும் படம் தள்ளி போனதால் சந்தானம் கடும் அப்செட்டில் உள்ளாராம்.