Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனருடன் கைக்கோர்க்கும் உதயநிதி- இம்முயற்ச்சியாவது வெற்றி பெறுமா

OK OK படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், உதயநிதி ஸ்டாலின். முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ஃபாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பார்த்தது.

ஆனால் அதன்பின் அவர் நடித்த படங்களில் மனிதனை தவிர சொல்லும்படியாக எப்படமும் வெற்றியடையவில்லை. காமெடியன்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என அனைவரையும் மாற்றி பார்த்தும் பலனில்லை.

இந்நிலையில் தர்மத்துரை புகழ் இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து முடித்திருக்கிறார், உதயநிதி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா முதல்முறையாக இணைந்துள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து உதயநிதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் தேர்வு செய்திருக்கும் இயக்குனர் அப்படிப்பட்டவர். அவர் வேறு யாரும் இல்லை தனக்கென தனி அடையாளத்தை உடைய மிஷ்கின் தான்.

இதனால் இப்படத்தில் புதுவிதமான உதயநிதியை பார்க்கலாம் என கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.