Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி ஹீரோவாக சிறுவன் செய்த பிரம்மிப்பான செயல்! ரஜினியிடமிருந்து கிடைத்த அமர்க்களமான பரிசு - புகைப்படம் உள்ளே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் இன்றளவும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வயதானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு மாறல என படையப்பா படத்தில் ரம்யாகிருஷ்ணன் சொல்வது போல தான்.

தமிழ் சினிமாவில் சூப்பர் யார் என்றால் அத்தனை பேரும் ஒருமித்த கருத்தாக சொல்வது அவரை தான். அண்மையில் ஈரோட்டை சேர்ந்த சிறுவன் யாசின் பள்ளிக்கூடம் செல்லும் வழயில் கிடந்த ரூ 50 ஆயிரத்தை தன் ஆசிரியர் மூலம் போலிசில் ஒப்படைத்தான்.இது பாராட்டுக்குரியதாக இருந்தது.

ஆனால் அவர் தான் ரஜினி சாரை பார்க்கனும் என சொல்ல அந்த ஆசை நிறைவேறியுள்ளது. ஆம். ரஜினிகாந்த் அந்த சிறுவனை பார்த்து வாழ்த்தி தன் மடியில் உட்கார வைத்திருக்கிறார்.

மேலும் அந்த சிறுவனுக்கு தங்கச் செயினை பரிசாக அளித்தாராம். அத்துடன் அவனை தன் பிள்ளையாக நினைத்து அவன் படிப்பு செலவை நானே ஏற்கிறேன் என ரஜினி கூறியுள்ளார்.