Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுதான் விஜய்யின் மாஸ்! பரபரப்பை உண்டாக்கிய ரசிகர்கள்!

ரசிகர்கள் மத்தியில் தளபதி என பாசத்துடன் அழைக்கப்படும் நடிகர் விஜய். அமைதியான அவருக்கு பின்னால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

அவர் தற்போது நடித்து வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போல இருந்ததை எதிர்க்க ஒரு கூட்டம் கிளம்பியது.

மேலும் தமிழக அரசும் நோட்டீஸ் விட படக்குழு போஸ்டரை தூக்கியது. ஆனால் ரசிகர்கள் விடுவதாக இல்லை. சமூகவலைதள விமர்சனங்களில் இறங்கினர். சிலர் டாட்டூவாக வரைந்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் அதே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து T-சர்ட் அடித்து அசத்தியுள்ளனர். விஜய்க்கான ஆதரவை அவர்கள் இதுமூலம் தொடர்ந்து காண்பிக்கிறார்கள் என தெரிகிறது.