Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாரா-திரிஷா இதில் யார் அழகு- விஜய் சேதுபதி கூறிய நச் பதில்

நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள படம் ஒண்டிக்கு ஒண்டி. ஜே எம் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

அண்மையில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் திரிஷா-நயன்தாரா இருவரில் யார் அழகு என்று கேட்டதற்கு, பெண்களை அப்படியெல்லாம் பிரித்து பார்க்க முடியாது, பெண்கள் எல்லோரும் அழகுதான் என்றார்.

திரிஷா-விஜய் சேதுபதி, நயன்தாரா-விஜய் சேதுபதி இதில் எந்த ஜோடி சூப்பராக இருக்கும் என்றதுக்கு, திரையில் பொருத்தத்தை பார்க்க கூடாது, அந்த படத்தில் அவர்கள் ஏற்று நடித்த வேடத்தை பொறுத்தே அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி தீர்மானிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.