Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டு மொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்திருக்கிற முக்கிய விசயத்தில் ரஜினிகாந்தின் முடிவு இதுதானாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் பாதி இறங்கிவிட்டார். இன்னும் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்க வேண்டியது தான் பாக்கி. சமீபகாலத்தில் அவர் பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

அதன் மூலம் சில சர்ச்சைகளையும் சந்தித்தார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது மக்கள் பலரையும் அதிர்ச்சியாக்கும் அரசின் திட்டம் சேலம் 8 வழிச்சாலை தான்.

ஊர் மக்களிடம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் ரஜினி இந்த விசயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் உருவாகினால்தான் நாடு முன்னேறும், தொழில் வளர்ச்சி பெருகும். உரிய இழப்பீடு, தேவையான நிவாரணம் போன்றவை கொடுக்கப்பட வேண்டும் .

முடிந்தவரை விவசாயிகள் பாதிக்காத வகையில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.