தற்சமயம் இந்தியா முழுவதும் பிரபலமாக பேசும் நபராக மாறியிருப்பவர் ஹீமா தாஸ்.
இம்மாதம் 4ஆம் தேதி பின்லாந்து நாட்டில் உள்ள Tampere நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட 2018 ஆண்டிற்கான IAAF World U20 Championships ல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை வெறும் 51.46 வினாடிகளில் அடைந்து இந்தியாவிற்கு தங்க பதக்கத்தை பெற்று தந்தவர் தான் இந்த ஹீமா தாஸ்.
இந்நிலையில் இவரது இந்த சாதனையை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் இவரை வாழ்த்தி டீவிட் செய்துள்ளார்.
What a fighter what an inspiration you are..!! Congratulations on creating history!! So proud !! God bless!! https://t.co/IFMS7x1aPZ
— Suriya Sivakumar (@Suriya_offl) July 14, 2018