Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

போட நல்ல உடை கூட இல்லாமல் இருந்தேன்: உருக்கமாக பேசிய நடிகர் விஜய்

அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் விஜய் தேவர்கொண்டா. அது ஹிட் ஆனதால் தற்போது இவர் கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் அவர் நேற்று 'ரவுடி' என்ற புதிய துணி பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த விழாவில் பேசும்போது அவர் தன் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார்.

முதலில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்துவந்தார். அப்போது அவர் வெளியில் யாரையாவது சந்திக்க செல்ல நல்ல உடை கூட இருக்காதாம்.. சில சமயங்களில் யவடே சுப்ரமணியம் படக்குழுவினரிடம் பேசி சில உடைகளை வாங்கி போட்டு கொண்டு செல்வாராம். பின்னர் 4 வருடங்களில் வாழ்க்கையே மாறிவிட்டது என அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார்.