Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 200 கோடி பட்ஜெட் படத்தில் விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்கப்போகின்றாராம்

விஜய் சேதுபதி தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதே நேரத்தில் கொஞ்சம் நல்ல கமர்ஷியல் படங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

இந்நிலையில் அடுத்த வாரம் இவர் தயாரித்து நடித்த ஜுங்கா படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

மேலும், விஜய் சேதுபதி சிரஞ்சீவி நடிக்கும் ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் SyeRaa Narasimha Reddy படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இதில் இவர் ஒரு தமிழ் பேசும் அரசனாகவே நடிக்கவுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகுபலிக்கு பிறகு தெலுங்கில் உருவாகும் பிரமாண்ட பட்ஜெட் படம் இவை என்பது குறிப்பிடத்தக்கது.