Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மனதார நன்றி தெரிவித்த கார்த்தி- எதற்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. அவரது நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யா தயாரித்திருந்த இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். கூட்டு குடும்பத்தின் பெருமைகளை பற்றி சொல்லியிருந்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடிகளாக சாயிஷாவும் ப்ரியா பவானி சங்கரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தை வெற்றிப்படமாக மாற்றி தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தை பார்த்து சண்டையிட்டு கொண்டிருந்த அண்ணன் தம்பி இருவர் சேர்ந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.