Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பகிரங்கமான விசயத்தை வெளியிட்ட பிக்பாஸ் பாலாஜியின் அம்மா! மனதை உருக்கிய சோகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ன் போட்டியாளர்களாக தாடி பாலாஜியும், அவரின் மனைவி நித்யாவும் கலந்துகொண்டார்கள். இருவரும் சில மாதங்களாக கருத்து வேறுபாட்டால் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அவர்கள் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழவேண்டும் என்பது உள்ளிருப்பவர்களின் விருப்பமும், வெளியில் இருக்கும் மக்களின் விருப்பமும் கூட. அது நடக்கும் என்றே நம்புவோம்.

இந்நிலையில் நேற்று நித்யா வெளியேறினார். பின் இருவரும் சகஜமாக பேசிக்கொண்டார்கள். 8 மாதங்களாக மகளை பார்க்காமல் இருந்த பாலாஜியும் மகளை பார்த்துவிட்டார்.

இந்நிலையில் அவரின் அம்மா பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். இது ஒரு கேம் ஷோ. சுய வாழ்க்கை வேறு. விளையாட்டு ஷோ வேறு. அது நிஜம் தானா என தெரியாது.

பேத்தி போஷிகாவை காட்டுவார்கள் என தெரியும். ஆனால் நான் அவளை பார்த்து ஒன்றரை வருடம் ஆகிறது. டிவியில் பார்த்த பின் தான் அவள் வளர்ந்துவிட்டாள் என தெரிந்தது.

பாலாஜி வீட்டில் எப்படியோ அதுபோல தான் அங்கும் இருக்கிறார். அவன் என்னை பற்றி பேசவில்லை என்றாலும் அவன் என் மீது அன்பு வைத்திருப்பான் என நம்புகிறேன்.

ஆனால் ஒருமுறை கூட இந்த அம்மாவின் நினைப்பு வரவில்லையே என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. நித்யா பாலாஜி இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் சந்தோசம் தான். என்னால் அவர்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்காது என கூறினார்.