Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிஷ்கின் என்னுடைய நண்பர், ஆனால் பெண்களை பற்றி அவர் கூறியது அசிங்கமாக இருக்கிறது- பிரபல நடிகர்

ராம் இயக்கிய பேரன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் மம்முட்டி, சித்தார்த், சமுத்திரக்கனி, அமீர், மிஷ்கின், யுவன் ஷங்கர் ராஜா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மிஷ்கின் பேசும்போது, மம்முட்டியின் நடிப்பை அப்படி பாராட்டி பேசியிருந்தார். அதோடு நான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்முட்டியை கற்பழித்திருப்பேன் என்று கூறியிருந்தார்.

எப்படி ஒரு பெரிய இயக்குனர் இவ்வளவு சாதாரணமாக இப்படி பேசுகிறார் என நிறைய பேர் கேள்வி எழுப்பினர். இந்த நேரத்தில் நடிகர் பிரசன்னா டுவிட்டரில், மிஷ்கின் என்னுடைய நண்பர் தான். ஆனால் அவர் பேசிய விஷயம் எனக்கு மிகவும் வெட்கமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. பெண்கள் மற்றும் தமிழ் நடிகர்களை அவர் அப்படி சொல்லியிருக்க கூடாது என கமெண்ட் செய்துள்ளார்.