விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே. ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் வரும் ஜூலை 23ம் தேதி படத்திற்கான டப்பிங் வேலை ஆரம்பிக்கிறது. இதில் முதலாவதாக விஜய் தனது குரலை பதிவு செய்கிறார். விஜய்யின் மாஸே அவர் ஸ்டைலாக பேசும் வசனங்கள் தான். அந்த வேலைதான் தற்போது ஆரம்பிக்க இருப்பதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் உள்ளது.
மேலும் ஜூலை 23ம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.