Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்-விஜய் ரசிகர்களுக்கு இணையாக மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்- அப்படி என்ன செய்தார்கள் பாருங்க

சமூக வலைதளம் என்றாலே அதிலும் டுவிட்டரில் அஜித்-விஜய் ரசிகர்கள் தான் அதிகம். அவர்கள் சண்டை போட்டால் எப்படி இருக்கும் என்பதை பல விஷயங்களில் பார்த்திருக்கிறோம்.

அதேசமயம் நல்ல விஷயங்களுக்காக ஒன்று கூடி நிறைய செய்திருக்கிறார்கள். இப்போது சூர்யா ரசிகர்களும் டுவிட்டரில் சாதனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதாவது சூர்யாவுக்கு வரும் 23ம் தேதி பிறந்தநாள், அதற்காக ஸ்பெஷலாக ஒரு டுவிட்டர் DP டிசைன் செய்யப்பட்டது. அந்த புகைப்படத்தை பலரும் #HBDSuriyaCDP என்ற டாக்கில் ஷேர் செய்தனர்.

இப்போது வரை அந்த டாக்கில் 200K பேர் பயன்படுத்தியுள்ளனராம், இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பயன்படுத்திய டாக் என்றதில் இதுவும் இடம்பெற்றுள்ளதாம். இதோ பாருங்கள் அந்த விவரத்தை,