Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார் ஓட்டி மோசமான விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகர் சித்தார்த்

நடிகர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டி சமீபத்தில் பல நடிகர்கள் போலீசிடம் சிக்கி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது சித்தார்த் ஷுக்லா என்ற சீரியல் நடிகர் பெரிய அளவில் விபத்து ஏற்படுத்தியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

சித்தார்த் ஷுக்லாவின் BMW கார் நேற்று மாலை ஆறு மணிக்கு மும்பை அந்தேரியின் Oshiwara Junction பகுதியில் மூன்று கார்களின் மீது மோதியுள்ளது. பின்னர் ரோட்டின் நடுவில் மோதிவிட்டது. இந்த விபத்தில் 3 பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த காரை ஓட்டிவந்தது யார் என தெளிவான ஆதாரம் இல்லாததால், சித்தார்த் தான் ஓட்டினாரா என விசாரணை நடந்து வருகிறது.