Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா

புதுபுது சாதனைகளை தனக்கு சொந்தமாக்கி வரும் படம் விஜய் நடிக்கும் சர்கார். பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை மட்டும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்று மலைக்க வைத்தது.

இந்நிலையில் மற்றொரு மலைக்க வைக்கும் சாதனையாக இந்த படத்தின் வெறும் இந்தி சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையின் வியாபாரம் மட்டும் ரூ.22 கோடிக்கு நடந்துள்ளது. தென்னிந்திய படங்களில் எந்த படமும் இந்த அளவிற்கு வியாபாரம் ஆனதில்லையாம், இதுவே முதல்முறை.

இப்போதே இத்தனை சாதனைகளை படைக்கும் சர்கார் படம் ரிலீஸானால் எத்தனை சாதனைகளை படைக்க போகிறதோ என விஜய் ரசிகர்கள் பூரித்துபோய் உள்ளனர்.