Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் விஜய் நடித்துவரும் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். இதனால் இப்படத்தை வாங்கும் முனைப்பில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.

பல கோடி ரூபாய்க்கு ஹிந்தியில் விற்பனையாகியுள்ள இப்படம் மலையாளத்தில் அதைவிட அதிக தொகைக்கு வியாபாரமாகும் என்றே தெரிகிறது.

ஏனெனில் தமிழ்நாட்டை போலவே பெரிய அளவிலான விஜய் ரசிகர்கள் உள்ள கேரளாவில் சர்கார் படத்திற்காக கட் அவுட், பேனர்கள் என வரவேற்பு இப்போதே தொடங்கிவிட்டது.