Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட வில்லனா இந்த அளவிற்கு சென்றுவிட்டார்- அதுவும் விஜய்யின் இந்த ஹிட் படத்தில் நடித்ததினால் தானாம்

விஜய் படங்களில் அவருக்கு எவ்வளவு வைட்டான ரோல் இருக்குமோ அதே அளவிற்கு தான் அப்படத்தின் வில்லனுக்கும் இருக்கும். விஜய் படத்தில் நடித்தாலே அந்த வில்லனுக்கு மார்கெட் உச்சிக்கு சென்றுவிடும்.

அதுபோன்று மிகப் பிரபலமான வில்லன் யாரென்றால் துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ்களுக்கு ஹெட்டாக நடித்த Vidyut Jammwal தான். அப்படத்தில் விஜய்க்கு சரி சமமாக கெத்து காட்டிய அவர் அதன் பிறகு சூர்யாவின் அஞ்சான் படத்திலும் பாஸிடிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள Looper என்ற அமைப்பு உலகில் உள்ள சிறந்த 7 தற்காப்பு நடிகர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் Vidyut Jammwal பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் 7ஆம் அறிவு படத்தில் டாங்லீ வில்லனாக நடித்திருந்த Johnny Nguyenனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.