Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்காக முக்கிய அறிக்கை வெளியிட்ட கலைஞர் கருணாநிதி!

கலைஞர் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அமைதி நிலவி வருகிறது. அவர் நலமாக இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் மன அமைதியை தந்துள்ளது.

விஜய்யின்வாழ்க்கையில் கலைஞரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. விஜய்யின் படங்களில் முக்கியமானது தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான இப்படம் அப்போது பெரும் அரசியல் சர்ச்சையை சந்தித்தது.

காரணம் படத்தில் இருந்த Time To Lead என்ற வசனம் தான். அந்நேரத்தில் படத்தை வெளியிட முடியாமல் இருந்தது. மேலும் படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அதையும் தாண்டி படம் வெளியானது.

படம் வெளியீடு குறித்து பேசுவதற்காக கொடநாடு வரை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க விஜய்யும், அவரின் அப்பாவும் சென்றார்களாம். ஆனால் பார்க்கமுடியாமல் போனதாம். ஆனால் படம் வெளியீடு பிரச்சனைக்கு தீர்வு கொடுத்ததற்காக ஜெயலலிதாவுக்கு விஜய் நன்றி கூறி அறிக்கை வெளியீட்டிருந்தார்.

அதே வேளையில் முன்னாள் முதல்வராக இருந்த கருணாநிதி விஜய்க்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் அவர் தலைவா படம் தம்பி விஜய் நடித்து ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசை தாக்குவது போல வசனம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் இது அரசியல் படம் அல்ல, யாரோ வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

மேலும் விஜய்யின் அப்பா சந்திரசேகரும் அரசுக்கு ஆதரவாக பலமுறை செயல்பட்டவர். இந்த அரசுக்கு வேண்டியவர் என குறிப்பிட்டிருந்தார்.