Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதை வாங்கவே காசு இல்லையா? இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம்

இந்திய சினிமாவில் டாப் நடிகர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் மட்டும் 40.5 மில்லியன் டாலர்கள் வரை வருமானம் ஈட்டி அவர் இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் நடிகராக உள்ளார் என போர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியான லிஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் ஆரம்பகாலத்தில் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார்.

"How To Learn Acting" என்ற புத்தகத்தை வாங்க கூட அவரிடம் காசு இருக்கவில்லையாம். ஆனால் இப்போது கோடி கணக்கில் சம்பளம் வாங்கினாலும் அந்த புத்தகத்தை தேடி வாங்க முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

"ஸ்டாராக இருப்பதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அது இன்று இருக்கும், நாளை போய்விடும்" எனவும் அக்ஷய் கூறியுள்ளார்.