Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னையெல்லாம் மக்களுக்கு பிடிக்குமா சார்! உருகிய அஜித் உச்சம் தொட்ட கதை தெரியுமா?

அஜித் இன்று தமிழ் நெஞ்சங்கள் தல என்று கொண்டாடும் ஒரு நடிகர். வெற்றி, தோல்வி தாண்டி அஜித்திற்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது கணக்கில் அடங்காதவை.

அவர் தும்மினால் கூட இந்தியளவில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள் அவருடைய ரசிகர்கள், அந்த அளவிற்கு பிரமாண்ட ரசிகர்கள் படையை வைத்திருக்கும் அஜித், இன்றுடன் தன் திரைப்பயணத்தில் 26வது வருடத்தை கடக்கின்றார்.

அஜித் ஆசை படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜிடம் கேட்பாராம், ‘சார் என்னையெல்லாம் மக்களுக்கு பிடிக்குமா?’ என்று, அதற்கு பிரகாஷ்ராஜ் ‘ஏன் அஜித் இப்படியெல்லாம் கேட்கிறீர்கள், கண்டிப்பாக பெரிய ஆளாக வருவீர்கள்’ என ஆறுதல் கூறுவாராம்.

அதேபோல் கல்லூரி வாசல் படப்பிடிப்பில் பிரஷாந்தை பார்க்க தான் கூட்டம் அலை மோதுமாம், ஒரு கடை திறப்பு விழாவில் கூட அஜித்தை ஓரமாக நிட்க வைத்து, பிரஷாந்தை கடை திறக்க வைத்தார்களாம்.

எனக்கும் ஒரு நாள் இப்படி கூட்டம் வரும் என்று அஜித் அன்றே சொல்ல, இன்று அஜித் கை அசைவிற்காக பிரமாண்ட ரசிகர்கள் படையே காத்திருக்கின்றது, இது தான் அஜித்தின் தன்னம்பிக்கை, அஜித் இன்று போல் என்றும் மக்கள் மனதை ஆள சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.