Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இவர்களுக்கு மானம் பெரிதல்ல! பணம் தான் - முன்னணி நடிகர்களை சீண்டிய சினேகன்! யாரை சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் கவிஞரும், நடிகருமான சினேகன். இவர் ஈழத்தமிழர்களின் தலைவரான பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டதைப்பற்றிய சாட்சிகள் சொர்க்கத்தில் என்ற படத்தின் ப்ரிவியூ காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தவிழாவில் பேசிய இவர், ரூ. 100 கோடி, ரூ. 500 கோடிக்கு எடுக்கப்படும் பிரமாண்ட படங்கள் எல்லாம் ஈழத்தமிழர்களின் படம் தானே. இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தந்தால் வாயை மூடிக்கொண்டு ஈழத்தமிழர்களின் வலியை பற்றி நடிப்பார்கள்.

இவர்கள் மானம் முக்கியமல்ல, பணம் தான் என முன்னணி நடிகர்களை சீண்டியுள்ளார்.

இவர் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த விஜய், ரஜினியைத்தான் சீண்டுகிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.