Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் செஞ்சா மட்டும்தான் உங்களுக்கு பிரச்சனையா! அப்போ இத ஏன் தடுக்கல? கோபமான விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் திரையில் தாண்டி நிஜத்திலும் மிக எதார்த்தமாக பேசும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் சர்கார் சர்ச்சையின்போது புகைபிடிக்கும் காட்சி தற்போதை விட 80களில் அதிகமாக இருந்தது என கூறியது ஏன் என்று கேட்கப்பட்டது.

இதுபற்றி அவர் கூறுகையில், பழைய படங்களில் சிகரெட் குடிப்பதை பெருமையாக காட்டப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நாங்கள் முடிந்தவரை அந்தகாட்சியை தவிர்க்கிறோம்.

படங்களில் நிறுத்திவிட்டால் மட்டும் எப்படி மாறும் என நினைக்கிறீர்கள். படத்தில் தான் ஒவ்வொருமுறையும் அறுவருப்பான காட்சியை திரையிட்டு புகை பிடிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறோம். எங்களுக்கு சென்சார் உள்ளது.

ஆனால் தொலைக்காட்சிகளில் எந்த கட்டுப்பாடும் இல்லை. காலையிலேயே ஆணுறை, உள்ளாடை விளம்பரங்கள் வருகிறது, இதுபற்றி கேட்கும் என் மகளிடம் எப்படி சொல்வேன்.

புகைப்பிடிக்கும் காட்சிகளிலும் அனைவரையும் கூறுங்கள். அதென்ன முன்னணி நடிகர்கள் என்றால் மட்டும் கேட்கிறீர்கள் என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.