Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞர் கருணாநிதியிடம் திருடிய சிம்பு- அவரே சொன்ன விஷயம்

நடிகர் சிம்பு யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனக்கு தோன்றிய விஷயத்தை வெளிப்படையாக பேசுவார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் ஆக்டீவாக இல்லாத சிம்பு இப்போது அதிரடி செய்து வருகிறார்.

அடுத்தடுத்து படங்கள் கமிட் ஆவது, பேட்டிகள் கொடுப்பது என பிஸியாக இருக்கிறார். அண்மையில் ஒரு பேட்டியில் கலைஞர் கருணாநிதி பற்றி பேசியுள்ளார் சிம்பு.

அதில் கலைஞர் அவர்களுடன் நான் நெருக்கமாக பழகியுள்ளேன், எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். படங்கள் பற்றி எல்லாம் கேட்பார், வல்லவன் படத்தை கூட பார்க்க வேண்டும் என்றார், ஆனால் என்னால் அவருக்கு திரையிட முடியவில்லை. அவருடைய பேனாவை எல்லாம் நான் திருடியிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.