Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக காலா குறித்த கேள்விக்கு கமல்ஹாசனின் ரியாக்‌ஷன்

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம்-2 இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல நிகழ்வுகளில் கலந்து வருகின்றார், இதில் ஆங்கில நியூஸ் சேனல் ஒன்றிலும் பேட்டியளித்துள்ளார்.

இதில் கமல்ஹாசனிடம் ‘காலா படம் தலீத் அரசியல் பேசியது, உங்கள் படம் நேஷ்னலிஷம் பற்றி பேசுகிறதே, இது அரசியல் பயணத்திற்காகவா?’ என்று கேட்டனர்.

இதற்கு கமல் ‘என் படத்தில் எப்போதும் அரசியல் இருக்கும், ஹேராமில் இல்லையா, தசவதாரத்தில் இல்லையா? நான் எப்போதும் அரசியல் பேசுபவன்’ என்று காலா பற்றி பதில் அளிக்காமல் பேசினார்.