Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை போன்றவர்களுக்கு கதவை எட்டி உதைத்து திறந்து வைத்தவர் - நடிகர் தனுஷ் உருக்கம்

நடிகர் தனுஷ் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்தவர் கலைஞர் என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.

"வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!" என தனுஷ் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.