Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு அண்ணா சமாதி அருகில் இடம் ஒதுக்கும்படி பலரும் கேட்டுவரும் நிலையில், அரசு காந்தி மண்டபம் அருகில் இடம் தருவதாக கூறியுள்ளது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

தற்போது இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. காலை 8.30 மணிக்குள் இந்த அவசர வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த சர்ச்சை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். “இது பகைமை பாராட்டுவதற்கான நேரம் அல்ல, 5 முறை தமிழக முதல்வராக இருந்தவர், தமிழுக்கும் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் சேவை செய்த தலைவர் என்ற வகையில் அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.