Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். நடிகர் நாசர் தலைவராக இருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறவிருக்கும் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படவேண்டும். இவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது.

ஏற்கனவே விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பேன் என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் தற்போது வழக்குகளால் கட்டிட பணிகள் தாமதமாகிபோகிறது.

இதனால் தேர்தலை தள்ளிவைக்க நினைக்கிறார்களாம். மேலும் சங்க உறுப்பினர்களும் மண்டப பணிகள் முடித்த பிறகே தேர்தலை நடத்த வலியுறுத்துகிறார்களாம்.

இதனால் வரும் 19 ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்களாம்.