Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்

விஜய்யின் பின்னால் பெருமளவிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமூகவலைதளங்களின் மூலம் அவர்களின் பலம் நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றே சொல்லலாம். விஜய்யின் படங்கள் சில பெரும் தடைகளை சந்தித்துள்ளன.

அதில் ஒன்று தலைவா படம். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த இப்படம் வெளியாவதே கேள்விக்குறியாக இருந்தது.

படத்தில் அரசியல் சார்ந்த விசயங்கள் இருந்தது. அதிலும் Time To Lead என்ற வசனம் தான் சிக்கலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் பட சூழ்நிலை அப்போதிருந்த முதலமைச்சரின் காதுக்கே சென்றது.

பின் பல பேச்சு வார்த்தைகளுக்கு நடுவே வெளியாகி வெற்றிபெற்றது. படமும் ஹிட், பாடல்களும் ஹிட். இப்படம் வெளியாக 5 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டி ரசிகர்கள் #5YrsOfThalaivaaDay #5YearsOfThalaivaa என சமூகவலைதளங்களில் கொண்டாடுகிறார்கள்.