Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு

விஜய் பொது இடங்களில் காண ரசிகர்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். அவர் ஏதாவது விழாவுக்கு வந்தால் பெருங்கூட்டமே கூடிவிடும். அவர் மைக் பிடித்து பேச ஆரம்பித்தால் ரசிகர்கள் குஷி தான்.

அந்த வீடியோக்கள் கூட சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதும், பார்வைகளை பெறுவதும் உண்டு. அவரின் படங்களில் ஒன்று ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தலைவா.

இப்படம் நேற்று 5 ம் ஆண்டு கொண்டாட்டத்தை எட்டியது. சில பிரச்சனைகளுக்கு நடுவே இப்படம் வெளியானது. அந்நேரத்தில் முக்கிய சானல் ஒன்றில் அவருக்கு அப்படத்திற்காக விருது கொடுத்தது.

அதை பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய விஜய் சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜமான ஒன்று. இதை மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள். ஜெயித்த படத்திற்கு விருது கொடுத்திருந்தால் சந்தோசப்பட்டிருக்க மாட்டேன்.

ஆனால் ஜெயிக்க வேண்டிய படத்திற்கு நீங்கள் விருது கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி என தன் ஸ்டைலில் கூறினார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அந்த வீடியோவும் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.