Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் மனதை மிகவும் பாதித்த விசயம்! நாட்டை உலுக்கிய சோகம்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இருக்கிறார். ஒரு சாதாரண பின்னணியில் இருந்து ஒரு பிரபல நடிகராகிவிட்டார்.

அண்மையில் தென்னிந்தியாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விசயம் கேரளாவின் மழை வெள்ள பாதிப்பு. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.

50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது இவ்விசயம் சிவகார்த்திகேயனையும் வருத்தப்படவைத்துள்ளது. அவர் உதவிக்கான தொலைபேசி எண்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எல்லாம் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப பிராத்தனை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.அவருக்கு அங்கும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திர, கன்னட அரசுகள் நிவாரண உதவி தொகையை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.