Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்

விஜய்க்கு உலக முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூக வலைதள ட்ரண்டுகள் சொல்லும். அவர்களுக்கு சாட்சி அதுதான். விஜய்யின் படங்களில் எப்போதும் பாடல்களுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஆனால் உலகளவில் புரட்சி செய்த பாடல் என்றால் ஆளப்போறான் தமிழன் தான். விவேக் எழுதிய இப்பாடல் கடந்த வருடம் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம்பெற்றது. ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இணையதளங்களில் பல டிஜிட்டல் சாதனைகள் ஒருபக்கம். மறுபக்கம் பாடலாசிரியருக்கும், படத்திற்கும் பல விருதுகள். இந்நிலையில் இப்பாடல் லிரிக் வீடியோ இதே ஆகஸ்ட் 11 ல் கடந்த வருடம் வெளியானது.

இப்பாடலின் சாதனையை ரசிகர்கள் #1yearofAalaporanTamizhan, #ForeverOfAalaporanTamizhan என பெருமையாக கொண்டாடுகிறார்கள். இப்பாடல் 42 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.