Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்! அப்போ ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் காத்திருக்கு

அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து நாலாவது படமாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை தீரன் படப்புகழ் வினோத் இயக்க உள்ளதாக ஒரு அறிவிப்பு சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரிக்க போவதாகவும் பேசப்படுகிறது. இதுக்குறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம்.

தற்போது இந்த படத்திற்கு இசையை இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் கவனிக்க போவதாக கூறப்படுகிறது. தற்சமயம் விஜய்யின் சர்கார் படத்திற்கு இசையமைத்து வரும் அவர் அதை முடித்தவுடன் இந்த படத்தின் வேலையில் இறங்குவாராம்.

மேலும் அஜித், ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடைசியாக நடித்த படம் வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.