Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி- விஜய்யே கூறிய பதிவு, இவரா காரணம்

மாஸ் நடிகர்கள் பலருக்கு பட்ட பெயர்கள் உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொருவருக்கும் இப்படி பெயர் கிடைப்பதற்கு பின்னால் சிலர் காரணமாக இருப்பர். அப்படி விஜய்க்கு இளையதளபதி என்ற பெயர் வர ஒரு ரசிகனே காரணமாம்.

இதுகுறித்து விஜய் கொடுத்த முந்தைய பேட்டியில் பேசியுள்ளார். அதில், ரசிகர்கள் பொதுவாக கடிதங்கள் அனுப்புவார்கள், அதில் ஒருவர் இளைய தளபதி என்று எழுதியிருந்தார். அந்த நேரம் ரஜினி அவர்கள் நடித்த தளபதி என்ற படம் வெளியாகி இருந்தது.

அதில் இருந்து தான் எனக்கு இளைய தளபதி என்ற பெயர் வந்தது, இதற்கு என் ரசிகர்களுக்கு தான் பெரிய நன்றி கூற வேண்டும் என்று சந்தோஷமாக பேசியுள்ளார்.