Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன சார் ஏமாத்திட்டீங்களே என்று சொன்ன அடுத்த நொடி அஜித் செய்த விஷயம்- கிரேஸி மோகன் ஓபன் டாக்

அபூர்வ சகோதரர்கள், பஞ்ச தந்திரம், அருணாச்சலம் என பல மெகா ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியவர் கிரேஸி மோகன். இவர் சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் அஜித் குறித்து அவரிடம் கேட்ட போது, ‘அஜித்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது, நான் அவருடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது.

ராஜசுந்தரம் இயக்கிய ஏகன் படத்திற்கு நான் தான் வசனம் எழுத இருந்தேன், ஆனால், அப்போது என்னால் எழுத முடியவில்லை.

அது என்னுடைய தவறு தான், ஒருநாள் அவர் வீட்டிற்கு செல்லும் போது ஒரு சாய்பாபா புகைப்படத்தை பார்த்தேன், அஜித் இது எனக்கு வேண்டும் என்றேன்.

நீங்கள் வீட்டுக்கு போங்கள் சார் உடனே வரும் என்றால், ஆனால், வரவில்லை, நான் ஒரு நாள் ஜாலியாக என்ன அஜித் ஏமாத்திட்டீங்களே? என்று கேட்டேன்.

உடனே அடுத்த நொடி அவருடைய உதவியாளர் அந்த புகைப்படத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார், அஜித் தங்கமான மனிதர்’ என்று புகழ்ந்துள்ளார்.