Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை கேரளா வெள்ளத்திற்கு கொடுத்தத்திலேயே விக்ரம் தான் அதிக தொகை- எவ்வளவு தெரியுமா?

சீயான் விக்ரம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர். இவருக்கு கேரளாவிலும் நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது. இவரின் ஐ படம் கேரளாவில் ரூ 20 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் கடுமையான வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது, இதனால் பல நடிகர், நடிகைகள் நிவாரண தொகை கொடுத்து வருகின்றனர்.

இதில் விக்ரம் இன்று கேரளா வெள்ளத்திற்காக ரூ 35 லட்சம் கொடுத்துள்ளார், இதுவரை கொடுத்த தமிழ் நடிகர்களிலேயே விக்ரம் தான் அதிகம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.