Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சூர்யாவும் உள்ளாரா? வெளியான போட்டோவால் பரபரப்பு, ஆனால் டிரைலரில் காட்டவில்லையே

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். அடுத்த மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங்கின் போது படக்குழுவினருடன் சூர்யா இருப்பது போன்ற ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. படத்தில் நடிக்கும் தனது மனைவியை சந்திக்க வந்தாரா? அல்லது படத்தில் எதாவது கெஸ்ட் ரோல் செய்துள்ளாரா? என்று தெரியவில்லை.

அவ்வாறு கெஸ்ட் ரோல் செய்திருந்தால் டிரைலரில் காண்பித்து இருப்பார்களே? என தோன்றும் பல கேள்விகளுக்கு விடை படம் ரிலீஸானால் தான் தெரியும். சூர்யா ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.