Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் காட்டில் இந்த வருட இறுதி வரை அடைமழை தான் போல! மாரி-2 படத்தின் ரிலீஸ் தேதியும் வந்துவிட்டது

தனுஷ், தமிழ் சினிமாவின் பல திறமைகளை கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என இவரது வளர்ச்சி அதிகரித்து கொண்டுதான் போகிறது.

தற்போது இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வடசென்னை. வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படம் அக்டோபர் 17ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம், விஜய்யின் சர்காருடன் தீபாவளிக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் யுவன் இசையில் தனுஷ் நடித்திருக்கும் மாரி-2 படமும் இந்த வருட இறுதியில் டிசம்பர் 21ல் ரிலீஸாகும் என கோலிவுட்டினர் கூறுகின்றனர். மேலும் அதே தேதியில் லாரன்ஸின் காஞ்சனா-3யும் விக்ரமின் துருவ நட்சத்திரமும் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

அப்படி பார்த்தால் இந்த வருட இறுதி வரை தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் போல.