Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழில் மட்டுமில்ல கர்நாடகாவிலும் கலக்கும் விவேகம்! ரசிகர்கள் செய்யும் காரியத்தை பாருங்க

அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் 3வது படமாக அமைந்தது தான் விவேகம். முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடப்பது போல் காட்சியமைக்கப்பட்டு இருந்த இப்படத்திற்கு அனிருத் தனது முழு திறமையையும் பயன்படுத்தி இசையமைத்திருப்பார்.

ஆனால் தொடர்ந்து சிவாவுடனயே அஜித் நடிப்பதாலோ அல்லது ஓவர் பில்டப் காட்சிகளினாலோ இந்த படம் இங்கு சரியாக வெற்றி பெறவில்லை. இதை அனைவரும் ஒத்து கொண்டுதான் ஆக வேண்டும்.

இருந்தாலும் இப்படம் கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு கமெண்டோ என்ற பெயரில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கு படத்தின் டீசரையே பல பார்வையாளர்கள் பார்த்து தொடக்கத்திலேயே அமர்களப்படுத்தினர்.

இந்நிலையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதும் இங்கு உள்ளவர்களை மிஞ்சும் அளவுக்கு அங்கு ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடியுள்ளனர். அதில் ஒரு சிறு வீடியோ தான் இது....