Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்தாராம், ஆனால்..! செக்க சிவந்த வானம் கதையா இருக்குமோ

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ஸ்டைலை கடைப்பிடிப்பவர் மணிரத்னம். தற்காலத்தில் உள்ள நடிகர்கள் அனைவரும் மணிரத்னத்தின் ஒரு படத்திலாவது நடிக்க ஆசைப்படுவர்.

ஏனெனில் இவரது படத்தில் கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். இந்நிலையில் இவர் நடிகர் விஜய்யை வைத்து 2011லேயே ஒரு படத்தை எடுக்க இருந்தாராம். ஆனால் அந்த படம் பொருளாதார நெருக்கடியால் நின்று போனதாம்.

மேலும் அப்படத்தில் விஜய்யுடன் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஆர்யா, அனுஷ்காவும் நடிக்க இருந்தனராம். இதையெல்லாம் வைத்து பார்க்கும் செக்க சிவந்த வானம் கதை மாதிரி உள்ளது தானே.

ஒருவேளை செக்க சிவந்த வானத்தை தான் அப்போதே விஜய்யை வைத்து எடுக்க இருந்தாரோ... அப்படி பார்த்தால் தற்போது நடிக்கும் எந்த நடிகர் விஜய்யின் ரோலை எடுத்திருப்பார்.