Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவை பேசவிடாமல் செய்த ரசிகர்கள்! திணறி போன ஆடிடோரியம், வீடியோவை பாருங்க புரியும்

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வரும் NGK படத்தை dream wariors சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என தயாரிப்பு நிறுவனம் சில நாட்கள் முன் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் பயங்கர கோபமான சூர்யா ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறும்பட போட்டி நிகழ்ச்சிக்காக சூர்யா சிறப்பு விருந்தினராக ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேச ஆரம்பித்த போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் NGK..NGK.. என கத்த ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் சூர்யாவின் சிறிது நேரத்தில் என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாக இருந்தார். அந்த கானொளி இதோ...