Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தும் இல்லை சூர்யாவும் இல்லை தீபாவளிக்கு விஜய்யின் சர்காருடன் மோதும் நடிகர் யார் தெரியுமா?

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சர்கார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு கொண்டுவர உள்ளனர்.

இந்த படத்துடன் முதலில் அஜித்தின் விஸ்வாசம் ரிலீஸாகும் என்றார்கள். பிறகு படப்பிடிப்பு முடிவடையாததால் பொங்கலுக்கு தள்ளி போனது. அதன்பின் சூர்யாவின் NGK என்றார்கள். பிறகு அதுவும் தள்ளி போனது. சரி, அப்படியென்றால் விஜய் சர்கார் மட்டும்தான் தீபாவளிக்கு சோலோவாக ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது விஜய்யின் சர்காருக்கு போட்டியாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரிய நடிகரின் படத்தை எதிர்த்து வெளியிட்டாலே அது மிகப்பெரிய விளம்பரம் தான் என படக்குழு நினைக்கிறார்களோ என்னவோ...

மேலும் இந்த படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்கான நகநக பாடல் செம பிரபலமாகியுள்ளது.