Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த தீபாவளிக்காவது தனுஷிடம் ஜெயிப்பாரா விஜய்? புள்ளி விவரத்தை பாருங்க புரியும்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்துடன் முதலில் அஜித்தின் விஸ்வாசம் சூர்யாவின் NGK ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

படப்பிடிப்பு முடிவடையாததால் அந்த படங்கள் தள்ளி சென்று சர்கார் தீபாவளிக்கு சோலோ தான் என எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில் தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு ரிலீஸாகும் என படக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனால் இதுவரை நண்பர்களாக இருந்த விஜய், தனுஷ் ரசிகர்கள் இடையே சற்று போட்டிகள் தலைதூக்கியுள்ளன. இந்த போட்டிகெல்லாம் காரணம் இவர்களின் நேருக்கு நேர் போட்டியில் அத்தனை தடவையும் தனுஷே ஜெயித்துள்ளது தான்.

ஆம், தனுஷ் மற்றும் விஜய் படங்கள் இதுவரை 3 முறை ஒரே நாளில் மோதியுள்ளன. 2007ல் பொல்லாதவன்- அழகிய தமிழ்மகன், 2009ல் படிக்காதவன்- வில்லு, 2011ல் ஆடுகளம்- காவலன் [படம் நன்றாக இருந்தாலும் சில அரசியல் பிரச்சனைகளால் தோல்வியை சந்தித்தது]. என இந்த 3 முறையும் தனுஷே வசூலை பார்த்தார்.

சரி, இந்த முறையாவது விஜய் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.