பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கும் சவாலாக இருந்தவர் டேனியல். காமெடி நடிகரான இவர் வந்ததும் ரசிகர்கள் மனதை ஈர்த்துவிட்டார். ஆனால் கடந்த வாரம் வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் அவர் வெளியே வந்ததற்கு காரணம் தெரியவந்துள்ளது. இதில் தன், அம்மாவும் தன் காதலியும் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகு டாஸ்கில் கவனம் செலுத்தமுடியவில்லையாம்.
அதோடு கடந்த சில நாட்களாக மஹத்துடன் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு ஆர்வம் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார். எனக்கு 50 லட்சம் ரசிகர்களின் அன்பே போதுமானது.
வெளியிடங்களுக்கு செல்லும் போது ரசிகர்கள் என்னிடம் நீங்கள் ஆக்டர் போல் இல்லை. ஆக்ச்சுவலாக தான் இருக்கிறீர்கள் என கூறியது என மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும் விரைவில் திருமண வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் வரவேண்டும் என அவர் கூறியுள்ளார்.