நம்ம தளபதிக்கு சினிமாவுல இந்த ஒரு விஷயம் மட்டும் செட்டே ஆகாதாம்- அப்படி என்னது தெரியுமா?
இளைய தளபதி தமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவர் பட தகவல்களையே திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள், அப்போது பட ரிலீஸ் எப்படி இருக்கும் அது நமக்கே தெரியும்.
சர்கார் படத்திற்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங், தீபாவளி படத்தின் ரிலீஸோடு சரவெடியாக கொண்டாட இருக்கிறார்கள்.
ரசிகர்கள் விஜய்யின் பழைய பேட்டிகளை அவ்வளவாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்த வண்ணம் உள்ளனர். அப்படி ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன், எப்போது இயக்குனர் ஆகப் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
விஜய் அதை மட்டும் நான் கண்டிப்பாக செய்ய மாட்டேன், நமக்கு செட் ஆகாத ஒரு விஷயம். முன்பு சில பேட்டிகளில் இயக்குனர் ஆசை என்று சொன்னேன். மிகவும் டென்ஷனான வேலை, நமக்கு செட் ஆகாது என்று கூலாக கூறியுள்ளார்.