Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் பேட்டயை தொடர்ந்து விஜய்யின் சர்கார் அப்டேட் இந்த தேதியில் தான் வர உள்ளதா?

ரஜினி தற்சமயம் பிசியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் பேட்ட என்ற தலைப்பும் மோஷன் போஸ்டரும் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அது வெளியானதில் இருந்து அதுதான் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இதே சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் சர்க்கார் படத்தின் அப்டேட் கேட்டு காலையில் இருந்து விஜய் ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த டீசர் இந்த மாதம் 25ஆம் தேதி வெளியிடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டினர் கூறுகின்றனர். ஏனென்றால் அன்றைய தினம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாள்.

குறைந்த பட்சம் அன்றைய தினத்தில் எதாவது ஒரு அப்டேட்டாவது கண்டிப்பாக வரும்.