Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலில் ரீமேக், அடுத்து சொந்த கதை - பிரபல இயக்குனருக்கு அஜித்தின் அட்வைஸ்

நடிகர் அஜித் விவேகம் படத்திற்கு பிறகு விஸ்வாஸம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணையவுள்ளார் என தகவல்கள் ஏற்கனவே வந்துவிட்டது.

ஏனெனில் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை முயற்சிக்காமல் ஆக்சனிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் வினோத்திடம் இந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் கதையை ரீமேக் செய்யலாம் என அஜித் கூறியுள்ளாராம்.

இதற்கு வினோத், என்னிடம் நேரடியாகவே சிறப்பான ஒரு கதை உள்ளது என்று கூறினாராம்.

முதலில் இந்த பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம். அடுத்ததாக உங்கள் கதையையும் எடுக்கலாம் என்று சமாதானம் செய்தாராம். கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதை முதலில் முயற்சிக்கலாம் என்ற நினைப்பில் தல உள்ளார் போல.