Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திற்கு எதிராக கிளம்பும் முன்னணி பத்திரிகைகள், காரணம் இது தானோ

அஜித் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் சக்தி. அவருக்கு என்று லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அவரை ஸ்கிரீனில் பார்த்தாலே போதும் என்ற மனநிலை தான் பலருக்கும்.

ஆனால், அதுவே அவருடைய பலவீனமாகிவிட்டது, ஆம், அஜித் தொடர்ந்து ஒரே மாதிரியான மாஸ் மசாலா படங்களில் தான் நடித்து வருகின்றார்.

விஜய்யும் அதை தான் செய்கின்றார், அதே நேரத்தில் அவர் தேர்ந்தெடுக்கும் இயக்குனர்கள் ரசிகர்களின் பேவரட்டாகவே உள்ளனர்.

அஜித்தோ தொடர்ந்து சிவாவுடன் பயணிப்பது ரசிகர்களுக்கே வெறுப்பு தான், சரி இது ஒரு பக்கம் இருந்தாலும் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த படம் வேதாளம் தான்.

அதேபோல் அஜித்திற்கு குடும்ப ரசிகர்கள் என்று வந்தது வீரம் படத்தில் தான், அப்படியிருக்க விவேகம் ஒரு தோல்வி அனைத்தையும் தலைக்கீழ் ஆக்கிவிட்டது.

அஜித் குறித்து சில முன்னணி பத்திரிகைகள் வேண்டுமென்றே சில தவறான ஆர்டிக்கலை வெளியிட்டு வருகின்றனர், ஏதோ அஜித் தொடர் தோல்வி கொடுத்து வருகின்றார் என்பது போல் எழுதியுள்ளனர்.

விவேகம் படத்தை தவிர, வேதாளம் என்ற பிரமாண்ட வெற்றிப்படத்தை தான் அஜித் கொடுத்துள்ளார், அதிலும் என்னை அறிந்தால், வீரம் விநியோகஸ்தர்களுக்கு லாபமான படங்களே, அப்படியிருக்க சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரை அப்பட்டமாக அஜித் என்ற தனிப்பட்ட நபரின் மேல் உள்ள வெறுப்பாக தான் தெரிகின்றது.

இதை நடுநிலை ரசிகர்களே சொல்கின்றனர், இதற்கெல்லாம் உண்மையான காரணம் என்னவென்றால் அஜித் எந்த பத்திரிகைக்கும் தற்போது பேட்டி தருவதில்லை, அதை மனதில் வைத்துக்கொண்டு தான் இப்படி நெகட்டிவ் ஆர்ட்டிகல் எழுதி அவர்கள் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.